நம்பிக்கையின் பாதையில் இன்றே முடிவுகளைப் பெறுங்கள்!!
சட்டத்தின் அதிகாரத்தை அணுகுவதற்கான வழி
- ஜெய் ஹிந்த்!!
ஜே.என்.என் குளோபல் லா கன்சார்டியம் எல்எல்பி
உங்கள் மிகவும் நம்பகமான சட்ட நிறுவனம் 2008 முதல் சேவை செய்து வருகிறது!!
நியாயமான கட்டணத்தில் அத்தியாவசிய சட்ட சேவைகளை உங்களுக்கு வழங்குதல்!!
விபத்து-காப்பீடு கோரிக்கைகள், குடும்பம், சிவில்
மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள்
எங்களை பற்றி
வழக்கறிஞர் திரு.ஜே.என்.நரேஷ் குமார், எழும்பூர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மிகவும் புகழ்பெற்ற நபர். அவர் தனது முன்மாதிரியான நம்பகமான தீர்ப்பு மற்றும் பகுப்பாய்வு திறன்களுடன் பல ஆண்டுகளாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயிற்சி செய்து வருகிறார். குற்றவியல் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், எழும்பூர் நீதிமன்றத்தில் தாலுகா சட்ட உதவி குழு வழக்கறிஞராகவும், சென்னை மாவட்ட சட்ட சேவை குழு வழக்கறிஞராகவும் பணிபுரிந்து, தற்போது உயர் நீதிமன்ற சட்ட சேவை ஆணையமான ‘ஏ’ குழு வழக்கறிஞராக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
ஜே.என்.என் வழக்கறிஞர் அலுவலகம், 2008-இல் அவரால் நிறுவப்பட்டது, அது இப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான சேவைகளை வழங்குவதற்காக ஜே.என்.என் குளோபல் லா கன்சார்டியம் எல்எல்பி-யாக உருவாகியுள்ளது. ஏறக்குறைய 17 ஆண்டுகால நிபுணத்துவம் பற்றிய அவரது பதிவுகள் மற்றும் அவரது வழிகாட்டும் கொள்கைகள் அவரை சமூகத்தில் ஒரு முன்மாதிரியான பாத்திரத்தை வகிக்க வைக்கிறது. அவரது உள்ளார்ந்த உள்ளுணர்வால் உந்தப்பட்டு, அவர் தனது மனிதநேய அக்கறையின் காரணமாக சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்.
அவரது முக்கிய திறன்கள் மற்றும் நிபுணத்துவம் பற்றிய பகுதி
அனைத்து வழக்கறிஞர்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவ முயற்சிப்பது உண்மைதான், ஆனால் சில வழக்கறிஞர்கள் உணர்ச்சி ரீதியில் பிணைக்கப்பட்ட மற்றும் குடும்ப வழக்குகளின் விளைவுகளின் தனிப்பட்ட தாக்கத்தை அறிந்து அவர்களுக்கு உதவுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, குடும்பச் சட்ட வழக்குகளில் பெரும்பாலும் ஆபத்தில் இருக்கும் விஷயங்கள்-குழந்தையின் நலன் அல்லது துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மனைவிக்கான நீதி போன்றவை-சட்டத்தின் பல பகுதிகளுடன் பொருந்தாத ஈர்ப்பு உள்ளது. நிச்சயமாக, குடும்பச் சட்டம் அந்தக் கனமான தலைப்புகளைக் காட்டிலும் அதிகம். எனவே எங்கள் வழக்கறிஞர் திரு.ஜே.என்.நரேஷ் குமார், கல்வியறிவு இல்லாத சாதாரண மக்களுக்கும் உதவுவதில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். அவர்களின் வாழ்க்கையின் மிகவும் கடுமையான காலங்களில் அவரது சட்ட நிபுணத்துவம் மற்றும் அசாதாரண திறன்களைப் பயன்படுத்தி அவர்களை வழிநடத்துகிறார். விபத்து-காப்பீடு கோரிக்கைகள், குடும்பம், சிவில், கிரிமினல், வங்கி, வேலைவாய்ப்பு போன்ற நடைமுறைப் பகுதிகளில் அவர் முக்கியமாக நிபுணத்துவம் பெற்றவர்.
குடும்ப சட்டம்
நிபுணத்துவம் பெற்ற பகுதி
குற்றவியல் சட்டம்
வணிக சட்டம்
வேலைவாய்ப்பு சட்டம்
சிவில் சட்டம்
வங்கி சட்டம்
பிற சட்டங்கள்
இந்திய குடும்பச் சட்டம்
Judicial Separation – Section 10 of the Hindu Marriage Act, 1955.
1. விவாகரத்து
கீழே உள்ள அடிப்படையில்
அ) திருமணத்திற்குப் பிறகு அவரது மனைவி அல்லாத வேறொருவருடன் தானே விரும்பி உடலுறவு கொண்டிருக்கிறார் திருமணத்திற்குப் பிறகு, எப்போதேனும் ஒரு முறை விரும்பி உடலுறவு கொண்டிருந்தாலும், அந்த ஒரு சம்பவத்தைக் காட்டியே விவாகரத்து கோரலாம்.
பி) கொடுமை என்பது
1.உடலுக்கு விளைவிக்கப்படும் கொடுமை 2.மனதிற்கு விளைவிக்கப்படும் கொடுமை என இரு வகைப்படும். கணவன் மனைவியை அடித்தால் அது உடலுக்கு செய்யும் கொடுமை எனப்படும். மனைவி மணம் நோகும்படி கணவன் ஏதேனும் செய்தால் அது மனதிற்கு செய்யும் கொடுமை ஆகும். (எ.கா) 1. மனைவி கணவனை ஒரு பொது இடத்தில் இழிவாகப் பேசி அவமானப்படுத்தினாள். தானே தீக்குளித்துக் கொண்டு அவளது கணவனை காவல் துறையினரிடம் சிக்குமாறு செய்யப்போவதாக அச்சுறுத்தினாள். இது கணவரின் மனதிற்கு செய்யும் கொடுமை ஆகும்.
2.கணவன் விபத்தில் சிக்கி பல மாதங்கள் மருத்துவனையில் படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வரும் காலத்தில், ஒரு முறையேனும் அவனது மனைவி, மருத்துவ மனை வந்து கணவனை பார்க்காதது. மனதிற்கு செய்யும் கொடுமை ஆகும்.
3.கணவனின் மற்றும அவனது உறவினர்களின் விருப்பத்திற்கு மாறாக மனைவி தானே விரும்பி கருக்கலைப்பு செய்து கொண்டது மனைவி கணவரின் மனதிற்கு செய்யும் கொடுமை ஆகும்.
4.வரதட்சணை கோரிக்கை செய்வதே மனதிற்கு செய்யும் கொடுமை, தம்பதியர்களில் ஒருவர் மற்றொருவருடன் வாழ்வது அபாயகரமானது என்று தோன்றுமளவிற்கு அம்மற்றொருவரின் நடத்தை அமைந்தால் அது கொடுமையின் கீழ் வரும்.
13(i-b) விவாகரத்து மனுச் செய்வதற்கு முன்னதாக தொடர்ச்சியான இரண்டு ஆண்டுகளுக்கு கணவன் மனைவி இருவரில் ஒருவர் இன்னொருவர் கைவிட்டுவிட்டுச் எந்தவித நியாயமான காரணமுமின்றி பிரிந்து சென்றால் பாதிக்கப்பட்டவர் விவாகரத்து கோரலாம்.
(ii)தம்பதிகளில் ஒருவர் வேறொரு மதத்திற்கு மாறிவிட்டதால் இந்துவாக இல்லை என்ற காரணத்தினால் மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.
(iii)தம்பதிகளில் ஒருவர் தீர்க்க முடியாத அல்லது குணமாக்கமுடியாத பத்தியமாக அல்லது விட்டுவிட்டு பத்தியமாக நோய்குட்பட்டவராக இருந்தால் அவருடன் சேர்ந்து குடும்ப வாழ்க்கை நடத்த முடியாத நிலை இருப்பின், விவாகரத்து கோரலாம்.
(iv)தம்பதிகளில் ஒருவர் தீராத மிகக் கொடிய தொழுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறாரென்றால், மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.
(v) தம்பதிகளில் ஒருவர் மிக எளிதில் தொற்றிக்கொள்ளக் தக்க பால்வினை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறாரென்றால், மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.
(vi) தம்பதகளில் ஒருவர் மதம் காரணமாக சாமியாராகி இந்த உலகப்பற்றை துறந்து விட்டிருந்தால் மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.
(vii) தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் உயிருடன் உள்ளாரா இல்லையா என்ற செய்தி, அவர் உயிருடன் இருந்தால் நியாயமாக யார் யாருக்கு அவர் உயிருடன் இருப்பது தெரிய வேண்டுமோ அவர்களுக்கு தெரியாமல் இருக்கும் நிலையில் மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.
விவாகரத்து கோர மனைவிக்கு உள்ள சாதகமான அடிப்படைகள்:
திருமணத்திற்கு பிறகு கணவர் வன்புணர்ச்சி அல்லது ஓரினப் புணர்ச்சி அல்லது விலங்குப் புணர்ச்சி ஆகிய குற்றத்தைச் செய்தால். மனைவிக்கு 15 வயது பூர்ததியாகும் முன்னரே திருமணம் நடைபெற்று அவள் 18 வயதுக்கு முன்னரே அத்திருமணத்தை ஏற்கவில்லை எனில் மனைவி விவாகரத்து கோரலாம்.
இந்திய குடும்பச் சட்டம்
Judicial Separation – Section 10 of the Hindu Marriage Act, 1955.
2. சேர்ந்து வாழ வைக்க வேண்டி மனு
தாம்பத்திய உறவு உரிமைகளை மீண்டும் கோரல் கணவரோ அல்லது மனைவியோ எவ்விதமான நியாயமான காரணமும் இல்லாமல் சேர்ந்து தாம்பத்திய உறவு வாழ்க்கையை நடத்த மறுத்து விலகி வாழும் பொழுது, அதனால் பாதிக்கப்பட்டவர் தான் இழந்த தாம்பத்திய உறவு உரிமைகளை மீண்டும் பெற்றுத் தரும்படி நீதிமன்றத்தில் மனு செய்யலாம். இம்மனு மாவட்ட நீதிமன்றத்தில் செய்யப்பட வேண்டும். அவ்வாறு பிரிந்து சென்று வாழ்வதற்கு நியாயமான காரணம் இருக்கிறது என எதிர் தரப்பினர் வாதிட்டால் அந்தகாரணத்தை சரியானது என்று நிரூபிக்கும் பொறுப்பு பிரிந்து சென்றவர் மீது சுமத்தப்படும்.
மனைவி கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்தாள். காரணம் என்னவென்றால் கணவரின் பெற்றொர்களும் அவருடனே வசிப்பதால், தான் பிரிந்து வாழ்வதாக கூறினார். ஆனால் இதை ஒரு நியாயமான காரணமாக நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. மனைவியை சரிவர நடத்தாமல் அடிக்கடி அவமானங்களுக்குள்ளாக்கியதால், அவள் கணவனை விட்டு பிரிந்து வாழ்வது சரியே என கூறப்பட்டது மனைவியின் விருப்பத்திற்கு மாறாக அவளை அசைவ உணவு சாப்படும்படியும், மது அருந்தும் படியும் கணவன் கட்டாயப்படுத்தியது, அவள் பிரிந்து வாழ்வதற்கு ஒரு சரியான காரணம் ஆகும் என கூறப்பட்டது.
3. அ) ஜுவனாம்சம்
மனைவி செய்யும் மனுவின் பேரில் ஒரு மொத்தத் தொகையை அவரது வாழ்க்கை முழுவதற்குமான பராமரிப்பிற்காகவும், ஆதரவிற்காகவும் வழங்குமாறு வசதியுள்ள கணவருக்கு நீதிமன்றம் உத்தரவிடலாம். அத்தொகையை மாதமாதம் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கொரு முறை வழங்குமாறும கணவருக்கு நீதிமன்றம் உத்தரவிடலாம். அவ்வாறு உத்தரவிடும் பொழுது, கணவரின் சொந்த வருமானம், சொத்து ஆகியவற்றையும், மனைவியின் வருமானம், சொத்து ஆகியவற்றையும் தரப்பினர்களின் நடத்தை மற்றும் வழக்கின் பிற சூழ்நிலைகள் ஆகியவற்றையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டு அப்பராமரிப்புத் தொகையை நிர்ணயிக்கப்படும்.
மேற்சொன்னவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் எந்தசமயத்திலும், மேற்கண்ட திருமண தரப்பினர்களில் எவரது வாழ்க்கையிலாவது மாற்றங்கள்(இன்னொரு திருமணம், வேறுஒருவருடன் உடலுறவு) ஏற்பட்டுள்ளதாக கணவர் நீதிமன்றத்தில் முறையிட்டால் நீதிமன்றம் திருப்தியுறுமானால், தாம் மேற்கண்டவாறு பிறப்பித்த உத்தரவை மாறுபடுத்தலாம், மாற்றலாம் அல்லது ரத்து செய்யலாம்.
பி) இடைக்கால ஜுவனாம்சம்
மனைவி தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளவும் போதிய சொந்த வருமானம் ஏதுமில்லை என நீதிமன்றத்திற்கு தோன்றினால், அவ்வாறு வருமானம் இல்லாத மனைவி செய்யும் மனுவின் பேரில், அவருக்கு வழக்கு நடத்துவதற்குண்டான செலவுகளையும், அந்த வழக்கு நடத்து கொண்டிருக்கும் அந்த இடைப்பட்ட காலத்தில் மாதமாதம பராமரிப்புத் தொகையையும் வழங்க வேண்டுமென கணவருக்கு நீதிமன்றம் உத்தரவிடலாம்.
ஆனால் அவ்வாறு உத்தரவிடும் பொழுது, போதிய வருமானமில்லை என்று கூறி மனுச் செய்யும் மனைவியின் சொந்த வருமானத்தையும், கணவரின் வருமானத்தையும கருத்தில் கொண்டு, உத்தரவு பிறப்பிக்கப்படும்.
வழக்கு நடந்து கொண்டிருக்கும் பொழுது மேற்படி வழக்கு செலவுக்காகவும், பராமரிப்புத் தொகையும் வழங்கப்படுவதால் இது இடைக்கால பராமரிப்புத் தொகை ( Interim Maintenance) என அழைக்கப்படுகிறது. இந்த வழக்கு நடவடைக்கைகளை கணவருக்கு அறிவிப்பு (Notice) பெற்ற தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் விசாரணையை நீதிமன்றம் நடத்தி உhயி உத்தரவை பிறபிக்க வேண்டும்.
4. பரஸ்பரமான ஒப்புதலின் பேரில் விவாகரத்து
ஒரு திருமணத்தை இரத்து செய்ய வேண்டும் என்ற ஒரு மனுவினை கணவன், மனைவி ஆகிய இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு ஒன்றாக சேர்ந்து அவர்களுடைய மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்யலாம். தாங்கள் இருவரும் ஒராண்டு அல்லது அதற்கும மேலான காலகாட்டத்திற்கு பிரிந்து தனித்தனியே வாழ்நது வருவதாகவும் தங்களால் ஒன்று சேர்ந்து வாழ இயலவில்லை என்றும், தங்களது திருமணம் கலைக்கப்பட வேண்டும் என்பதற்கு பரஸ்பரம் உடன்பட்டுள்ளதாகவும் காரணம் காட்டி, விவாகரத்து கோரலாம். உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி தற்போது ஒரே மாதத்திற்குள் விவாகரத்தை பெற்றுவிடலாம்.
வழக்கை தாக்கல் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் :
1. திருமண புகைப்படம்
2. திருமணம் பதிவு செய்திருந்தால் பதிவு சான்றிதழ்
3. அழைப்பிதழ்
4. இருவரின் பாஸ்போர்ட் புகைபடங்கள்
5. இருவரின் இருப்பிட ஆவணம் ( ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், வங்கி பாஸ் புக், பாஸ்போர்ட்)
5.செல்லாத திருமணம்
அ) மணமக்கள் தடுக்கப்பட்ட உறவுமுறையில் இருக்கக் கூடாது ஆனால் அத்தகைய உறவுமுறையில் மணந்து கொள்ள அனுமதிக்கும் வழக்கமோ, வழக்காறோ அப்பகுதியில் இருந்தால் திருமணம் செய்து கொளளலாம்.
பி) எதிர்மனுதாரரின் ஆண்மையற்ற தன்மையால் திருமண பந்தம் முழுமையடையவில்லை என்றால் :
திருமணம் என்பது உடலுறவு கொண்டு குழந்தைகளை ஈன்றெடுத்து இனிது வாழ்வது. அப்பொழுதுதான் அத்திருமணமும் முழுமையடைகிறது. ஆண்மையற்ற தன்மை என்பது உடலுறவு கொள்ள முடியாமலும், குழந்தைகளை ஈன்றெடுக்க முடியாமலும் போவதாகும். ஒரு நபர் தனது திருமணத்தை முழுமையாக்க முடியாத அளவிற்கு அவனது உடல் அல்லது மனநிலை இருப்பின், அந்நபர் ஆண்மையற்று விளங்குகிறார் என் Digvijay Singh Vs. Pratap எனும் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.
Elizbeth Vs. Stanely எனும் வழக்கில் திருமணம் முடிந்து தமபதியினர் 4 இரவுகள் ஒன்றாக உறங்கிளனர். அதற்கு மேல் நான்கு மாதங்கள் ஒன்றாக வாழ்ந்தனர். ஆனால் கணவன், தன்னுடைய மனைவியுடன் உடலுறவு எதுவும் கொள்ளவில்லை. இது அக்கணவனின் ஆண்மையற்ற தன்மையை காட்டுவதாகக் கூறி, மனைவி தொடுத்த வழக்கில் ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
சி) திருமணம் ஆகும்போது மணமக்களில் ஏவரேனும் ஒருவர் அத்திருமணத்திற்கு சம்மதம் கூட கொடுக்க முடியாத அளவிற்கு பித்து மனநிலையில் இருக்கக்கூடாது. அவ்வாறு சம்மதம் கொடுத்தாலும் அவருக்கு மூளை கோளாறு காரணமாக திருமணம் செய்து கொள்ள தகுதியற்றவராகவோ, குழந்தை பெற்றெடுக்க தகுதியற்றவராகவோ இருக்க கூடாது. விட்டு விட்டு தாக்க கூடிய புத்தி சுவாதீனமின்மை நோய் இருக்க கூடாது.
இந்திய குடும்பச் சட்டம்
Judicial Separation – Section 10 of the Hindu Marriage Act, 1955.
6. குழந்தை பாரமரிப்பு யாருக்கு உள்ளது
7. காப்பாளர்
8. தத்தொடுத்தல்
தத்தெடுக்கப்படத் தகுதிகள்:
1.தத்தெடுக்கப்டும் நபர் இந்துவாக இருக்க வேண்டும்.
2.ஏற்கனவே தத்தெடுக்கப்பட்டிருக்கக் கூடாது.
3.திருமணம் ஆகியிருக்கக்கூடாது. திருமணமானவர்களைத் தத்தெடுக்கும் வழக்கம் அல்லது வழக்காறு, சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே உண்டு என்றால் அவ்வாறு தத்தெடுத்துக் கொள்ளலாம்.
4.15 வயது பூர்த்தியாகி இருக்கக்கூடாது. 15 வயதுக்கு மேற்பட்டவர்களை தத்தெடுக்க அனுமதிக்கும் வழக்கம் அல்லது வழக்காறு இருந்தால் அவ்வாறு தத்தெடுத்துக் கொள்ளலாம்.
தத்தெடுப்பிற்குண்டான பிற நிபந்தனைகள் :
ஒரு மகனைத் தத்தெடுப்பதென்றால், தத்தெடுக்கும் தந்தைகோ அல்லது தாய்க்கோ வேறு இந்து மகனோ அல்லது பேரனோ அல்லது கொள்ளுப் பேரனோ தத்தெடுக்கப்படும் காலத்தில் இருக்கக்கூடாது.
ஒரு மகளைத் தத்தெடுப்பதென்றால், தத்தெடுக்கும் தந்தைகோ அல்லது தாய்க்கோ வேறு இந்து மகளோ அல்லது மகளின் மகளோ தத்தெடுக்கப்படும் காலத்தில் இருக்கக்கூடாது.
தத்தெடுப்பவர் ஆணாகவும் தத்து எடுக்கப்பட வேண்டியவர் பெண்ணாகவும் இருந்தால், தத்து எடுக்கும் தந்தை, தத்து எடுக்கப்பட வேண்டிய பெண்ணை விட 21 வயது மூத்தவராக இருத்தல் வேண்டும்.
தத்து எடுப்பவர் பெண்ணாகவும தத்து எடுக்கப்பட வேண்டிய நபர் ஆணாகவும் இருந்தால், தத்து எடுக்கும தாய், தத்து எடுக்கப்பட வேண்டிய மகனைவிட 21 வயது மூத்தவராக இருக்க வேண்டும்.
ஒரே குழந்தையை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் ஒரே சமயத்தில் தத்தெடுக்கப்பட முடியாது.
ஒரு இந்து ஆண் தத்தெடுத்துக் கொள்ள தகுதி
புத்தித் தெளிவோடு இருக்கின்ற, உரிமை வயது வந்த எந்த ஒரு இந்து ஆணும், ஒரு மகனையோ அல்லது மகளையோ தத்தெடுத்துக்கொள்ளலாம். மனைவி உயிரோடு இருந்தால், அவளுடைய ஒப்புதல் இல்லாமல் தத்தெடுக்க முடியாது. (1) மனைவி முழுமையாகவும், இறுதியாகவும் சன்யாசியாகி உலகப்பற்றை துறந்து விட்டாலோ அல்லது (2) இந்துவாக இல்லாமல் போய்விட்டாலோ அல்லது (3) தக்க அதிகார வரம்புடைய நீதிமன்றத்தால் புத்தி சுவாதீனமீன்மை என்று அறிவிக்கப்பட்டு விட்டாலோ மனைவியின் ஒப்புதல் இல்லாமல் தத்தெடுக்கலாம்.
தத்தெடுக்கும் காலத்தில் ஒருவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருந்தால் எல்லா மனைவியினரின் ஒப்புதலையும் பெற வேண்டியது அவசியம். எந்த ஒரு மனைவியினுடைய ஒப்புதலாவது அவசியமில்லை என்றால், மேற்கண்ட மூன்று காரணங்களில் ஏதேனும் ஒன்றை அம்மனைவியை பொறுத்தவரை காட்ட வேண்டும்.
ஒரு இந்து பெண் தத்தெடுத்துக் கொள்ள தகுதி
புத்தித் தெளிவோடு இருக்கின்ற, உரிமை வயது அடைந்து விட்ட, திருமணமாகாத, திருமணம் ஆனாலும் (1) அத்திருமணம் கலைக்கப்பட்டு விட்டாலோ அல்லது (2) கணவன் இறந்து விட்டாலோ, அல்லது (3) கணவன் முழுமையாக மற்றும் இறுதியாக உலகப்பற்றை துறந்து விட்டாலோ அல்லது (4) இந்துவாக இல்லாமல் போய் விட்;டாலோ அல்லது (5) தக்க அதிகாரவரம்புடைய நீதிமன்றத்தால் கணவன் புத்தி சுவாதீனமுடையவன் என்று அறிவிக்கப்பட்டு விட்டாலோ, ஒரு பெண் தத்தெடுத்துக் கொள்ளலாம்.
தத்துக் கொடுக்கத் தகுதிகள்
1. தந்தை அல்லது தாய் அல்லது காப்பாளர் தவிர வேறு எந்த நபருக்கும் ஒரு குழந்தையைத் தத்துக் கொடுக்கும தகுதி கிடையாது.
2. தந்தை உயிரோடு இருந்தால் அத்தகுதி அவருக்கு மட்டுமே உண்டு. ஆனால் அந்த உரிமையை மனைவியின் ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்தக்கூடாது. மனைவி முழுமையாக மற்றும் இறுதியாக சன்யாசியாக உலகப்பற்றை துறந்துவிட்டாலோ அல்லது இந்துவாக இல்லாமல் போய்விட்டாலோ அல்லது தக்க அதிகார வரம்புடைய நீதிமன்றம் அவளை புத்தி சுவாதீனமின்மைஃபித்து நிலையினள் என்று அறிவித்துவிட்டாலோ அக்கணவன் தனது மனைவியின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை.
3. தந்தை இறந்து விட்டாலோ அல்லது முழுமையாக மற்றும இறுதியாக சன்யாசியாகிவிட்டாலோ அல்லது அதிகார வரம்புடைய நீதிமன்றம் புத்தி சுவாதீனமின்மை, பித்து நிலையினள் என்று அறிவித்துவிட்டாலோ தாய் குழந்தையைத் தத்துக் கொடுக்கலாம்.
9. குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்
10. வரதட்சனை கொடுமை
11. இஸ்லாமிய விவாகரத்து சட்டம்
12. குழந்தை பார்ப்பதற்கான மனு
13. சீர்வரிசை மற்றும் நகைகளை திரும்ப பெறுவது
14. வழக்கை ஒரு நீதிமன்றத்திலிருந்து சொந்த ஊரில் அல்லது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள இன்னொரு நீதிமன்றத்திற்கு மாற்றுவது
வாடிக்கையாளரின் சான்றுகள்
உங்களுக்கு சேவை செய்வதில் பெருமை கொள்கிறோம்!!
திரு. ஜே.என் நரேஷ்குமார் எம்.எல், வழக்கறிஞர், பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வுகள், பண எண்ணம் கொண்டவர் அல்ல, மிகவும் நட்பு மற்றும் மரியாதைக்குரியவர். நான் அவரை அனைத்து சட்ட சேவைகளுக்கும் பரிந்துரைக்கிறேன்.
-Rgds,
திரைப்பட இயக்குனர் & தயாரிப்பாளர்
ராகுல் பரமஹம்சா
நான் இரவு 11 மணியளவில் உங்களை அழைத்தேன், எந்த தயக்கமும் இல்லாமல் நீங்கள் அழைப்பை எடுத்து பதிலளித்து தீர்வுகளை வழங்கினீர்கள்.அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.மிக்க நன்றி.
-பிரபா பொன்ராஜ்
*வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்* .
ஐயா,
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. உங்கள் சேவையை நாங்கள் விரும்புகிறோம்..
-சதீஷ் குமார்
எதையும் எதிர்பார்க்காமல் நல்ல ஆலோசனைகளை வழங்குகிறார். நல்ல உள்ளம் கொண்டவர். பெறப்பட்ட தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவரது சட்ட உதவி நன்கு அறியப்பட்டதாகத் தோன்றியது மற்றும் அணுகக்கூடியதாக இருந்தது. எனது கேள்விகளுக்கான பதில்கள் தெளிவாகவும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருந்தன. எனது கேள்விகளுக்கு உடனுக்குடன் செய்திகளை அனுப்பினார்.
- லதா முருகேசன்
இலவச சட்ட உதவிக்கு!!
மின்னஞ்சல்
சமூக ஊடகம்
Copyright © 2022 JNN GLOBAL LAW CONSORTIUM LLP - All Rights Reserved. Website Policies